தமிழக செய்திகள்

திமுக - மநீம பேச்சுவார்த்தை 27-ம் தேதிக்கு மாற்றம்

மநீம கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை நடக்கவிருந்த நிலையில் தேதி மாற்றப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி ஏப்ரலில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால், கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில், கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் திமுக ஈடுபட்டு வருகிறது.

இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை நடக்கவிருந்த நிலையில் 27-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. திமுக - மக்கள் நீதி மய்யம் கட்சி இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை பிப்.27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.