தமிழக செய்திகள்

போராட்டம் நடத்த பொள்ளாச்சி நோக்கி சென்ற திமுக எம்.பி. கனிமொழி தடுத்து நிறுத்தம்

போராட்டம் நடத்த பொள்ளாச்சி நோக்கி சென்ற திமுக எம்.பி. கனிமொழி தடுத்து நிறுத்தப்பட்டார்.

தினத்தந்தி

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு கைதாகி சிறையில் உள்ள திருநாவுக்கரசு உடன் தொடாபில் இருந்ததாக பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம் மற்றும் ஹேரோன் பால், பாபு ஆகியோரை சிபிஐ போலீசாரால் கடந்த 5-ம் தேதி கைது செய்தனா.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி போராட்டம் நடத்த சென்ற திமுக எம்.பி. கனிமொழி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். ஈச்சனாரி அருகே கனிமொழி சென்ற வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் கனிமொழி மற்றும் திமுகவினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து போலீசாரின் தடையை மீறி கனிமொழி புறப்பட்டுச்சென்றார். மேலும் பொள்ளாச்சியில் போராட்டம் நடத்தாமல் திரும்ப மாட்டேன் என்று உறுதியாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகளை கைது செய்ய கோரி இன்று போராட்டம் அறிவித்து இருந்தது திமுக.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு