சென்னை,
இதுகுறித்துத் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், நாளை மறுநாள் (21-11-2021) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். இந்த் கூட்டத்தில் திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து, நீட் தேர்வு விவகாரம், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள், கொரோனா நிலவரம் ஆகியன குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.