தமிழக செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடியில் உண்மை நிலை குறித்து தி.மு.க. அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் - டிடிவி தினகரன்

நகைக்கடன் தள்ளுபடியில் உண்மை நிலை என்ன என்பது குறித்து தி.மு.க. அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

நகைக்கடன் தள்ளுபடியில் உண்மை நிலை என்ன என்பது குறித்து தி.மு.க. அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். 5 பவுன் வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற கவர்ச்சியாக அறிவித்த தி.மு.க.,

ஆட்சிக்கு வந்த பிறகு அதனைச் செயல்படுத்தாமல் புதுப்புது நிபந்தனைகளைப் போட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. இதனால் 5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி என்பதில் தி.மு.க. அரசு நம்பிக்கை துரோகத்தை அரங்கேற்ற திட்டமிட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

எனவே, நகைக்கடன் தள்ளுபடியில் அரசின் நிலைபாடு என்ன என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும். மேலும், தள்ளுபடி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருப்போருக்கு நகையை மீட்காவிட்டால் ஏலம் விடப்படும் என நோட்டீஸ் அனுப்புவதையும் உடனடியாக நிறுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை