தமிழக செய்திகள்

பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடக்கிறது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.

சென்னை,

திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியார்களிடம் கூறியதாவது:

பல்கலைக் கழகங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து ஆளுநர் பேசியிருப்பது வேதனை அளிக்கிறது. ஊழல் குறித்து வெளியிட்டுள்ள கவர்னர், நடவடிக்கை எடுக்காதது வேடிக்கையானது.

இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடக்கிறது. ஊழல் குறித்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம்; நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் .

இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரியதில் அதிமுகவுக்கு தோல்வி பயம் இருப்பது தெளிவாக தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...