தமிழக செய்திகள்

தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் குறித்து அறிவிப்பு வெளியீடு

தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் சென்னையில் 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2021-ல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலையொட்டி தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினரிடம் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொது அம்சங்கள் மற்றும் தங்கள் மாவட்டங்களைச் சார்ந்த பொதுநலச் சங்கங்கள், வணிக அமைப்புகள், இளைஞர்கள், விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களின் நலன் விழையும் அமைப்புகளுக்கும் உரிய முறையில் அழைப்புகள் அளித்து, அந்தந்த பகுதிகளில், அந்த அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும், அந்த துறைகளில் உள்ள பொதுவான பிரச்சினைகள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் கீழே அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் தங்கள் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு 5-ம் கட்ட சுற்றுப்பயண விவரம் வருமாறு:-

ஜனவரி-18 காலை 9 மணி - சென்னை வடக்கு, மாலை 4 மணி - சென்னை வடகிழக்கு, 19-ந்தேதி, காலை 9 மணி - சென்னை கிழக்கு, மாலை 4 மணி - சென்னை தெற்கு, 20-ந்தேதி, காலை 9 மணி - சென்னை தென்மேற்கு, மாலை 4 மணி - சென்னை மேற்கு ஆகிய இடங்களில் கூட்டம் சரியான நேரத்தில் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து