தமிழக செய்திகள்

தி.மு.க. முப்பெரும் விழா விருதுகள்: அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு 'கலைஞர் விருது'

தி.மு.க. முப்பெரும் விழாவில் விருதுகள் பெறுவோரின் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கலைஞர் நூற்றாண்டு விழா - தி.மு.க. பவள விழா வருகிற செப்டம்பர் 17-ந்தேதி வேலூரில் தி.மு.க. முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. தி.மு.க. முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகள் பெறுவோரின் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மயிலாடுதுறை கி.சத்தியசீலனுக்கு பெரியார் விருது, முன்னாள் அமைச்சர் மீஞ்சூர் க.சுந்தரத்துக்கு அண்ணா விருது, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கலைஞர் விருது, தென்காசி மலிகா கதிரவனுக்கு பாவேந்தர் விருது, பெங்களூரு ந.ராமசாமிக்கு பேராசிரியர் விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்