தமிழக செய்திகள்

இளையான்குடி 13-வது வார்டு இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி

இளையான்குடி 13-வது வார்டு இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது.

தினத்தந்தி

இளையான்குடி,

இளையான்குடி பேரூராட்சி 13-வது வார்டில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற (தி.மு.க.) மிர்சா உடல் நலக்குறைவால் தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக பேரூர் செயலாளர் நஜிமுதீன் போட்டியிட்டார். அ.தி.மு.க. சார்பாக தாஜ் மைதீன் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டார். இதில் நஜிமுதீன் 451 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தாஜ் மைதீன் 190 வாக்குகளை பெற்றார். சுயேச்சை வேட்பாளர்கள் மீரான் கனி 5 வாக்குகளும், முகம்மது அப்துல்லா 111 வாக்குகளும் பெற்றனர்.வெற்றி பெற்ற நஜிமுதீனுக்கு இளையான்குடி வட்டார தேர்தல் மேற்பார்வையாளர் கந்தசாமி, தேர்தல் அலுவலர் கோபிநாத் ஆகியோர் வெற்றி சான்றிதழை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப. மதியரசன், ஒன்றிய செயலாளர்கள் வெங்கட்ராமன், தமிழ்மாறன், செல்வராஜன் மற்றும் நிர்வாகிகள் மலைமேகு, காளிமுத்து, சேதுபதி மற்றும் பலர் கலந்து கொண்டு சால்வை அணித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை