ஆறுமுகநேரி:
ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மகளிர் தொண்டர் அணி ஆலோசனை கூட்டம் முக்காணியில் உள்ள கட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.கோட்டாளம் தலைமை தாங்கினார். மாநில மகளிரணி பிரசார குழு செயலாளர் ஜெசி பொன்ராணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மகளிர் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சாரதா பொன் இசக்கி, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கிய மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.