தமிழக செய்திகள்

சென்னையில் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்; 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னையில் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்படி, தமிழகத்தில் தபால் மற்றும் ரெயில்வே துறையில் வட மாநிலத்தவர் பணியில் அமர்த்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தேசிய கல்விக்கொள்கை வரையறையை திரும்பப்பெற வேண்டும்.

3 மாதங்களுக்கு ஒரு முறை தி.மு.க. இளைஞரணியின் மண்டல மாநாடு நடத்தப்பட்டு பின்னர், மாநில மாநாடு நடத்தப்படும்.

தி.மு.க. இளைஞரணி உறுப்பினர்களின் வயது வரம்பு 35 வரை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், 30 லட்சம் பேர்களை இளைஞரணியில் சேர்ப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்