தமிழக செய்திகள்

டெல்லியில் தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்

டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில், திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில், திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த 30ஆம் தேதி டெல்லி வந்தார்.

தொடர்ந்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து விழாவில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், டெல்லியில் இன்று மாலை திமுக அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. திமுக தலைவரும் முதல் அமைச்சருமான மு.க ஸ்டாலின், திமுக அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி, பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி