தமிழக செய்திகள்

தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது: கனிமொழி எம்.பி.

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை யாருமே பேசுவது கிடையாது என கனிமொழி எம்.பி. கூறினார்.

திருச்சி,

திருச்சியில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறி

யதாவது:-

தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை பொதுவாக யாருமே பேசுவது கிடை யாது. ஆட்சிக்கு வராதவர்களின் தேர்தல் அறிக்கை குறித்து மக்கள் பேசவே மாட்டார்கள். மத்திய மந்திரி பியூஷ்கோயல் கியாஸ் தட்டுப்பாட்டை சரி செய்யட்டும். அதன்பிறகு தமிழ்நாடு பற்றி பேசட்டும். இது மிக முக்கியமான பிரச்சினை. தேர்தல் நேரத்தில் கற்பனை விஷயங்கள் குறித்து பேசி பயனில்லை.

திருச்சியில் விஜய் பேசிய போது சொந்த பிரச்சினைக்கு பிரதமரை சந்திக்கும் முதல்-அமைச்சர் கியாஸ் சிலிண்டர் பிரச்சினைக்கு ஏன் நேரில் சந்திக்கவில்லை என்று பேசியுள்ளார். முதல்-அமைச்சருக்கு சொந்த பிரச்சினை எதுவும் கிடையாது. டெல்லிக்கு நேரடியாக போக வேண்டிய அவசியமில்லை. முதல்-அமைச்சர் இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். விஞ்ஞானம் முன்னேறிவிட்டது. கடிதம் எழுதினாலே அதை பிரதமருக்கு இ-மெயிலில் அனுப்பலாம். நாடு முழுவதும் இருக்கக்கூடிய பிரச்சினைதான், கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு. 'மேக் இன் இந்தியா' என்று கூறிக்கொண்டு, இந்த நிலைக்கு தள்ளி விட்டனர். இறக்குமதியை நம்பியே மட்டும் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. சிறுபான்மை மக்களுக்கு உதவக்கூடிய எந்த ஒரு நிறுவனமும், தொண்டு நிறுவனமாக இருந்தாலும் அவர்களின் உரிமையை பறிக்கக்கூடிய எப்.சி.ஆர். சட்டம் முன்வடிவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.”

இவ்வாறு அவர் கூறினார்.