தமிழக செய்திகள்

திமுகவில் விருப்ப மனு: 6-ம் தேதி கடைசி நாள்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளான இன்று மதியம் 2 மணிக்கு மேல் விண்ணப் பங்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

நடைபெற இருக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி சட்டசபை பொது தேர்தலுக்கு தி.மு.க.வின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர்கள் கடந்த 20-ந்தேதி முதல் 2-ந்தேதி (நாளை) வரை கட்சி தலைமை அலுவலகத்தில் விண்ணப்பித்திட வேண்டும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளி யிடப்பட்டது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளான இன்று மதியம் 2 மணிக்கு மேல் விண்ணப் பங்கள் பெறப்படும். மேலும் தி.மு.க. தலைவரிடம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வேண்டு கோள் வைத்ததற்கு இணங்க 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரையில் விருப்ப மனு பெற கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.