பெரம்பலூர்:
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் 90 மணி நேர பயிற்சி அளித்து ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை ஊதியத்தில் ஆட்கள் சேர்ப்பு நடைபெற உள்ளது எனவும், இதற்கான பணி நியமன ஆணை ஜூன் முதல் அல்லது 2-வது வாரத்தில் வெளியிடப்படும் எனவும், ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம் என்ற போலியான அறிவிப்புகள் சமூக வலைத்தளங்களான வாட்ஸ்-அப், முகநூல் (பேஸ்புக்), இணையதளங்கள் வழியாக பரவி வருகிறது. கால்நடை பராமரிப்பு துறைக்கு சம்பந்தமில்லாத தவறான இந்த தகவலை நம்பி பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் ஏமாற வேண்டாம். இதுபோன்ற தவறான தகவல்களை தங்களிடம் யாராவது தெரிவித்தால் அது குறித்து மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு 9443191716 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.