தமிழக செய்திகள்

வேலூரில் டாக்டர் வீட்டில் கொள்ளை: ரூ.1.50 லட்சம், 40 பவுன் நகை மாயம்

அம்பிகா மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

வேலூர்,

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி ஏரியூரை சேர்ந்தவர் முனிரத்தினம். ஐ-கோர்ட்டில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அம்பிகா (வயது 70). கணவர் இல்லாததால் தனியாக வசித்து வருகிறார். தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெங்களூரில் சேல்ஸ் மேனாகவும், 2-வது மகன் புருஷோத்தமன் செங்கல்பட்டில் டாக்டராக பணியாற்றி வருகின்றனர்.

அம்பிகா நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு மகளை பார்ப்பதற்காக செங்கல்பட்டிற்கு சென்றார். அன்று அன்று இரவு அப்பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் அம்பிகாவின் வீடு பூட்டப்பட்டு இருந்ததை கண்டனர். மர்ம நபர்கள் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

நகை கொள்ளை

பூஜை அறையில் பையில் இருந்த 40 நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றனர். நேற்று காலை அம்பிகாவின் வீட்டு மாடியில் வாடகைக்கு குடியிருக்கும் பாலாஜி என்பவர் கீழே வந்தார். வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து அம்பிகாவிற்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அம்பிகா மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது.