தமிழக செய்திகள்

சம்பளம் வழங்கக்கோரி டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சம்பளம் வழங்கக்கோரி டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

அடுக்கம்பாறை

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா காலத்தில் தனி வார்டு அமைக்கப்பட்டது. இதில் டாக்டர்கள் 40 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததால் இந்த டாக்டர்கள் அனைவரும் கடந்த மார்ச் மாதம் முதல் பணியில் இருந்து விடுவிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து 3 மாதங்களாக இந்த டாக்டர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நேற்று காலை அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் அலுவலகம் முன்பு டாக்டர்கள் சம்பளம் வழங்கக் கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நிலுவையில் உள்ள 3 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்த மருத்துவமனை அதிகாரிகள், டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சம்பளம் வழங்க உடனடியாக உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்