தமிழக செய்திகள்

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள்- முதல்-அமைச்சர் வேண்டுகோள்

ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதியுதவி வழங்குபவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளியிடப்படும் என்றும் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நன்கொடை செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் எனவும் ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதியுதவி வழங்குபவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளியிடப்படும் என்றும் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் அளிக்கும் நன்கொடை முழுவதும் கொரோனா மருத்துவ கட்டமைப்பிற்கு மட்டுமே செலவிடப்படும். மேலும், செலவீனங்கள் குறித்த வெளிப்படையான தகவல்கள் மக்களுக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது