தமிழக செய்திகள்

முக்கூடல் அருகே தங்கம்மன் ஸ்ரீ சின்னத்தம்பி சுவாமி திருக்கோவில் கொடை விழா

முக்கூடல் அருகே தங்கம்மன் ஸ்ரீ சின்னத்தம்பி சுவாமி திருக்கோவில் கொடை விழா சிறப்பாக நடைபெற்றது.

தினத்தந்தி

நெல்லை மாவட்டம் ,முக்கூடல் அருகே தங்கம்மன் ஸ்ரீ சின்னத்தம்பி சுவாமி திருக்கோவில் கொடை விழா நடைபெற்றது.விழாவை முன்னிட்டு 29 ம் தேதி மாலை அம்மனுக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விளக்கு பூஜையை ஜெயபால் செல்வி தொடங்கிவைத்தார். விளக்கு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

30 ம் தேதி மாலை முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. 31ம் தேதி காலை 8 மணிக்கு பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்பாளுக்கு பால் அபிஷேகமும்,உச்சிகால பூஜையும் நடைபெற்றது.தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு பக்தர்கள் அம்பாளுக்கு பொங்கல் வைத்தும், ஊர் சுற்றி நேமிதம் எடுத்தும் வந்தனர்.பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.இரவு 12 மணிக்கு அருள்மிகு சின்னத்தம்பி சுவாமிக்கு சாமக்கொடை நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு அம்பாள் மற்றும் சுவாமிகளுக்கு பூஜையும், ஊர் சுற்றி மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு சிறுவர்-சிறுமியர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை தங்கம்மன் கோவில் விழா கமிட்டியார், ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து