தமிழக செய்திகள்

போலீசாரின் தபால் ஓட்டுக்கு பணப்பட்டுவாடா: திருச்சி போலீஸ் கமிஷனர் அதிரடி மாற்றம் பொன்மலை உதவி கமிஷனர் பணி இடைநீக்கம்

போலீசாரின் தபால் ஓட்டுக்கு பணப்பட்டுவாடா செய்த புகாரில் திருச்சி போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்டார். பொன்மலை உதவி போலீஸ் கமிஷனர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தினத்தந்தி

சென்னை,

திருச்சியில் போலீசாரின் தபால் ஓட்டுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்ட புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் உள்பட 6 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக சி.பி. சி.ஐ.டி.போலீஸ் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தேர்தல் ஆணையத்தை அதிர்ச்சி அடைய வைத்து விட்டது.ஓட் டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரம் போலீஸ் துறையிலும் அரங்கேற்றப்பட்டது, முதல் முறையாக நடந்துள்ளது.

கமிஷனர் மாற்றம்

இந்த நிலையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் நேற்று பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இதற்கான உத்தரவை நேற்று இரவு பிறப்பித்தது. அவருக்குப்பதில் புதிய போலீஸ் கமிஷனர் யாரும் உடனடியாக நியமிக்கப்படவில்லை.

லோகநாதனை தேர்தல் முக்கியத்துவம் இல்லாத பணியில் அமர்த்தவும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

மேலும் திருச்சி பொன்மலை உதவி கமிஷனர் தமிழ்மாறன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கான உத்தரவையும், தேர்தல் ஆணையம் நேற்று இரவு பிறப்பித்தது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது