தமிழக செய்திகள்

விஸ்வகர்மா திட்டத்தை புரிந்துகொள்ளவில்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி

விஸ்வகர்மா திட்டத்தை சரியாக புரிந்துகொள்ளவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்..

தினத்தந்தி

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கைவினை கலைஞர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, விஸ்வகர்மா திட்டத்தை அரசியல் தலைவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. எனவே அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். விஸ்வகர்மா தொழிலாளர்கள் இல்லை என்றால் தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் வளர முடியாது.

எனவே பிரதமர் அவர்களுக்கு போதிய சலுகைகள் கிடைக்க வேண்டும் என நம்புகின்றார். ஆனால் துரதிஷ்டவசமாக இதனை அரசியலாக பார்த்து மக்களை தவறாக வழி நடத்துகின்றனர், என்று பேசினார்.

மேலும் பேசிய அவர், தமிழகத்தில் பட்டியலின பெண் ஊராட்சி தலைவராக பதவி ஏற்பது தடுக்கப்படுவதாக செய்திகளின் மூலம் அறிந்தேன். பட்டியலின பெண்ணுக்கு நீதி மறுக்கப்படும் நிலையில் சிலர் இங்கு சமூக நீதியை காப்பதாகவும்  சமூகத்தை பாதுகாப்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால் பட்டியலின மக்கள் ஒடுக்கப்படுகின்றனர். சமூகத்தில் நஞ்சை பரப்பி அதனை பிளவு படுத்தியுள்ளனர் , இவ்வாறு  அவர் பேசினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு