தமிழக செய்திகள்

ராஜகோபுரத்திற்கு ரூ.35 லட்சத்தில் கதவு

வாலாந்தூர் அங்காள பரமேசுவரி கோவில் ராஜ கோபுரத்திற்கு ரூ. 35 லட்சத்தில் கதவு தயார் செய்யப்பட்டு உள்ளது. இதனை ஊர்வலமாக எடுத்துச்சென்று பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

தினத்தந்தி

உசிலம்பட்டி, 

வாலாந்தூர் அங்காள பரமேசுவரி கோவில் ராஜ கோபுரத்திற்கு ரூ. 35 லட்சத்தில் கதவு தயார் செய்யப்பட்டு உள்ளது. இதனை ஊர்வலமாக எடுத்துச்சென்று பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

கும்பாபிஷேகம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது வாலாந்தூர். இந்த ஊரில் புதிதாக கட்டப்பட்டு உள்ள அங்காளபரமேசுவரி கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இதன் ஒரு பகுதியாக அந்த கோவிலில் கட்டப்பட்ட ராஜ கோபுரத்திற்கு ரூ.35 லட்சம் ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்ட கதவை நாட்டாமங்கலத்தில் இருந்து ஆதிகால வழக்கப்படி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. அப்போது பெண்கள் கையில் வேப்பிலையுடன் ஆடி வந்தனர்.

வரவேற்பு

மேலும் கொண்டுவரப்பட்ட கதவிற்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மஞ்சள் நீரை தெளித்து வரவேற்றனர். அதன் பின்னர் ராஜகோபுரத்தில் அந்த கதவை பொருத்தி ஏராளமான பக்தர்கள் வணங்கி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்