தமிழக செய்திகள்

சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் இரட்டை கொலை சம்பவம்: 4 மணி நேரத்தில் கொலையாளிகளை கைது செய்த போலீசார்

சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் இரட்டை கொலை சம்பவத்தில், 4 மணி நேரத்தில் கொலையாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

தினத்தந்தி

மயிலாடுதுறை,

சீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொன்று 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. நகை வியாபாரி தன்ராஜின் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள், தன்ராஜின் மனைவி ஆஷா( 45), மகன் அகில் (28) ஆகியோரை கொடூரமாக தாக்கினர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

மேலும் இந்த கொடூர தாக்குதலில் தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் நிகில் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். கொலையாளிகள் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்ததுடன், சிசிடிவியின் ஹார்டுடிஸ்க் மற்றும் கார் உள்ளிட்டவற்றையும் கொள்ளை கும்பல் எடுத்துச்சென்றதாக தகவல் வெளியானது.

இந்த சம்பவம் தொடர்பாக சீர்காழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில், தற்போது கடலூர் மாவட்டம் எருகூர் அருகே வட மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் நிகழ்ந்த 4 மணி நேரத்தில் கொலையாளிகளை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்