தமிழக செய்திகள்

காதல் மனைவிக்கு வரதட்சணை கொடுமை: ராணுவ வீரர் உள்பட 5 பேர் மீது வழக்கு

தேனி அருகே காதல் மனைவிக்கு வரதட்சணை கொடுமை செய்த ராணுவ வீரர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி அருகே தப்புக்குண்டு கிராமத்தை சேர்ந்த குணசேகரன் மகன் செல்வக்குமார் (வயது 25). ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் அதே ஊரை சேர்ந்த தரணிகா (22) என்பவரை காதலித்து வந்தார். கடந்த ஆண்டு அவர்கள் இருவரும் வீரபாண்டியில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், செல்வக்குமார் தனது காதல் மனைவியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று வாழ்ந்து வந்தார். இந்நிலையில், செல்வக்குமாரும், அவருடைய குடும்பத்தினரும் தரணிகாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தரணிகா புகார் செய்தார். அதன்பேரில், செல்வக்குமார், அவருடைய தாய் காவேரி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்