தமிழக செய்திகள்

பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை

ராமநாதபுரம் அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்ததாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் அருகே உள்ள தொருவளுர் கவரங்குளம் பகுதியை சேர்ந்தவர் துரைக்கண்ணு மகன் அன்புமுருகன் (வயது 40). இவருக்கும் கவிதா (36) என்பவருக்கும் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்துள்ளது.

திருமணத்தின்போது கவிதா வீட்டினர் 18 பவுன் தங்க நகையும், அன்புமுருகனுக்கு 5 பவுன் தங்க நகையும், ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருள்களும் கொடுத்துள்ளனர். திருமணமான நாள் முதல் சீர்வரிசை பத்தாது, நகை பத்தாது என்று கூறி அன்புமுருகன் மற்றும் அவரின் தாய் சரஸ்வதி ஆகியோர் கூறி கொடுமைப்படுத்தியதோடு மேலும், 10 பவுன் நகையும், ரூ.5 லட்சத்தையும் வாங்கி வரும்படி கூறினார்களாம். இதற்கு வழிஇல்லை என்று கூறியதால் கவிதாவை வீட்டைவிட்டு விரட்டிவிட்டார்களாம். இதுகுறித்து கவிதா அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு