தமிழக செய்திகள்

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்தவர்கள் உருவப்படங்களுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் மரியாதை

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்தவர்கள் உருவப்படங்களுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் மரியாதை.

தினத்தந்தி

சென்னை,

பா.ம.க. தலைமை அலுவலகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 1987-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி தொடங்கிய ஒரு வார கால தொடர் சாலைமறியல் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதலில் கொல்லப்பட்ட 21 இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளின் 34-வது ஆண்டு நினைவுநாள் சமூகநீதி நாளாக இன்று (நேற்று) கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நாளையொட்டி சென்னையில் உள்ள தமது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளின் உருவப் படங்களுக்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு முழுவதும் இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு பா.ம.க. மற்றும் அதன் துணை அமைப்புகளையும், சார்பு அணிகளையும் சேர்ந்தவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை