திருச்செந்தூர்,
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தொழில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் அறிவியல் கண்டுபிடிப்பிற்கான போட்டிகள் அடுத்த மாதம்(ஜனவரி) 10-ந் தேதி நடைபெற உள்ளது.
மாணவர்கள் பலர் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உடையவராக உள்ளனர். அத்தகைய மாணவர்களின் அறிவு திறன், கலைத்திறனை வெளிப்படுத்தும் பொருட்டு இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது.
இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் விதமாகவும் நடைபெற உள்ள இந்த போட்டிகளில் பாலிடெக்னிக் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுடைய மாணவர்கள் தங்களுடைய அறிவியல் சார் கண்டுபிடிப்புகளின் கருத்து சுருக்கம் மற்றும் செயல் விளக்க மாதிரிகளின் தொகுப்பை வருகிற 31-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு பதிவு கட்டணம் கிடையாது. மாணவர்கள் போட்டியில் பங்கு கொள்ள வரும்போது தங்களுடைய அடையாள அட்டை மற்றும் போனபைடு சான்றிதழை தவறாமல் கொண்டு வர வேண்டும்.
இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கண்கவர் பரிசுகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04639-242482 மற்றும் 04639-220700 ஆகிய தொலைபேசி எண்களையும் அல்லது sacoeinterprojectexpo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் தொடர்பு கொள்ளலாம்.