கன்னியாகுமரி,
நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் சஜின் (வயது 25). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், நாகர்கோவிலில் என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதற்கிடையே சஜினும், அந்த மாணவியும் யாருக்கும் தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.