தமிழக செய்திகள்

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகிறது.

குழாயில் உடைப்பு

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமம் அய்யனார் கோவில் அருகே கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட நீருந்து நிலையம் உள்ளது. இந்த நீருந்து நிலையம் மூலம் ஜெயங்கொண்டம், பெரம்பலூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகத்திற்காக கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் இந்த நீருந்து நிலையத்தில் உள்ள குழாயில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக ஆற்றில் இருந்து தண்ணீர் அனுப்பப்படும் நேரத்தில் அதிக அளவு குடிநீர் வெளியேறி வீணாகிறது.

சுகாதார சீர்கேடு

அவ்வாறு வெளியேறும் நீர் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்திற்கு செல்வதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய வண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்