தமிழக செய்திகள்

சம்பை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு

சம்பை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

தினத்தந்தி

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிளை அமைப்பு கூட்டம் ராமநாதபுரம் தாலுகா சம்பை மேற்கு குடியிருப்பில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முத்துராமு தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் கல்யாணசுந்தரம், நாகரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை தலைவர் பெருமாள், செயலாளர் ராஜா, பொருளாளர் லிங்கராசு ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் சம்பை கண்மாய்க்கு வரும் கால்வாயை தூர்வாரி சீரமைக்கவும், பழுதடைந்த சருக்கை மழைகாலத்திற்குள் சரி செய்யவும் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால் மக்கள் குடிப்பதற்கும், கால்நடைகளுக்கு தேவையான தண்ணீரை கூட விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் உள்ளதால் தண்ணீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து