தமிழக செய்திகள்

சென்னையில் வரும் 30ம் தேதி 8 பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!!

சென்னையில் வரும் 30ம் தேதி 8 பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று குடிநீர் வழங்கல் வாரியம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சென்னையில் வரும் 30 ஆம் தேதி 8 பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என குடிநீர் வழங்கல் வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சென்னையில் அம்பத்தூர், அண்ணா நகர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வரும் 30 ஆம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்