தமிழக செய்திகள்

ரூ.60 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்

சீர்காழியில் அரசு பள்ளிகளுக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

தினத்தந்தி

சீர்காழி:

சீர்காழி அருகே புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அரசு பள்ளிகளுக்கு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்படும் குடிநீர் எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் ராஜா வரவேற்றார். சீர்காழி வட்டார கல்வி அலுவலர்கள் பூங்குழலி, நாகராஜ், கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆசிரியர் அருணாச்சலம் மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் 8 பள்ளிகளுக்கு 8 குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள், நோட்டு, புத்தகம் இதை போல் இரண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு தேவையான கட்டில் மெத்தை, சக்கர நாற்காலி உள்ளிட்ட உபகரண பொருட்களை வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் விஜயஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் ஜுனைதா பேகம், வட்டார கல்வி மேற்பார்வையாளர்கள் ஜெய்சங்கர், ஞானபுகழேந்தி, ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் அருணாச்சலம் செய்திருந்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்