தமிழக செய்திகள்

கிணத்துக்கடவு அருகே,விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

கிணத்துக்கடவு அருகே. விஷம் குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே உள்ள எஸ்.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர்(வயது 46). இவர், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். மேலும் இவர் கோவில்பாளையத்தில் சொந்தமாக ஆட்டோ வைத்து ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு கோமதி என்ற மனைவியும், ஹரி அன்பு செல்வன் என்ற மகனும் உள்ளனர். இதற்கிடையே சங்கர், மது பழக்கத்திற்கு ஆளாகி சரிவர வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனை அவரது மனைவி கோமதி கண்டித்துள்ளார். அப்போது சங்கர், மனைவி கோமதியிடம் குடிப்பழக்கத்தை விட முடியாதால் சாவப்போவதாக அடிக்கடி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை சங்கர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். அவரது மனைவி கோமதி, அப்பகுதியினர் உதவியுடன் சங்கரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சங்கர் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை