தமிழக செய்திகள்

போச்சம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலி

மத்தூர்:

போச்சம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலியானார்.

லாரி டிரைவர்

ஊத்தங்கரை தாலுகா பெரியகொட்டகுளம் பக்கமுள்ள வைரம்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 27). லாரி டிரைவர். இவர் கடந்த 6-ந் தேதி இரவு போச்சம்பள்ளி அருகே எர்ரம்பட்டியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மேல் பகுதியில் ஏறி நின்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக சென்ற மின் வயரில் ரஞ்சித்குமாரின் கை பட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ரஞ்சித்குமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற போச்சம்பள்ளி போலீசார் ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி