தமிழக செய்திகள்

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

தக்கோலம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தினத்தந்தி

தக்கோலம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம், தக்கோலம் போலீஸ் நிலையம் சார்பில் நடைபெற்றது. சப்-இன்ஸ்பெக்டர் தீபன் சக்ரவர்த்தி கலந்துகொண்டு கஞ்சா, மது, சிகரெட் உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், அதன் மூலம் சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் பற்றி மாணவரிடம் எடுத்துரைத்தார். தொடர்ந்து மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ஓம் பிரகாஷ், தனி பிரிவு போலீஸ்காரர் ராஜேஷ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு