தமிழக செய்திகள்

மதுபோதையில் பெண் போலீஸ் விடுதிக்குள் நுழைந்த போலீஸ்காரர்; பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

மதுபோதையில் பெண் போலீஸ் விடுதிக்குள் நுழைந்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தினத்தந்தி

திருவாரூர்,

திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் வைத்தியநாதன். இவர் விபத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை விடுவிப்பதற்காக அதன் உரிமையாளரிடம் பணம் கேட்டதாக புகார் எழுந்தது.

இதேபோன்று திருவாரூர் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் தீபக். சம்பவத்தன்று நள்ளிரவு மதுபோதையில் இருந்த அவர், ஆயுதப்படை பெண் போலீசார் தங்கி இருக்கும் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக புகார் வந்தது.

இந்த புகார்களின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் விசாரணை நடத்தினார். இதையடுத்து வைத்தியநாதன், தீபக் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு