சென்னை,
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கடந்த வாரம் முழுவதும் மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்,, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், வேலூர், தி.மலை மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
* நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.