தமிழக செய்திகள்

வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வெப்பசலனம் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பசலனம் காரணமாக கடலோர மாவட்டங்களான காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குமரிக்கடல் பகுதியில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் குமரிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு