தமிழக செய்திகள்

வரத்து குறைவால் மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.9 ஆயிரத்திற்கு விற்பனை

வரத்து குறைவால் மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.9 ஆயிரத்திற்கு விற்பனையானது.

நொய்யல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கை அதிகளவில் பயிரிட்டு வருகிறார்கள். இங்கு விளையும் மரவள்ளிக் கிழங்குகளை புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும் ஆலைகளுக்கு வியாபாரிகள் அனுப்பி வருகின்றனர். மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிகளவில் மரவள்ளிக்கிழங்குகளை வாங்கி செல்கின்றனர். மரவள்ளிக்கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.

கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கை ஜவ்வரிசி தயார் செய்யும் மில் அதிபர்கள் டன் ஒன்று ரூ.8 ஆயிரத்திற்கு வாங்கி சென்றனர். தற்போது டன் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. அதேபோல் கடந்த வாரம் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று ரூ.9 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. மரவள்ளிக்கிழங்கு வரத்து குறைவாலும், ஜவ்வரிசி விலை உயர்ந்துள்ளதாலும் மரவள்ளிக்கிழங்கின் விலை உயர்ந்துள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு