தமிழக செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

சென்னை,

சென்னை வானிலை மையம் கூறி உள்ளதாவது:-

அரபிக் கடல் பகுதியில் இருந்து வரக்கூடிய காற்றும் வங்கக்கடலில் இருந்து வரக்கூடிய காற்றும் சென்னைக்கு அருகே ஒன்று சேர்வதாலும் தென் மேற்கு பருவக்காற்று காரணமாகவும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 7 சென்டிமீட்டர் மழையும், கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் பஜார் நடுவட்டம் ஆகிய இடங்களில் தலா 6 சென்டி மீட்டர் மழையும், கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு, சின்னக்கல்லாரில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் காற்றுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசாகவும் பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும், மீனவர்கள் மத்திய வங்க கடலுக்கும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்க கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்றும் அப்பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை