தமிழக செய்திகள்

சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்.!

கூடுவாஞ்சேரி அருகே சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இரவு நேரங்களில் அதிக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், தற்போது தொடர் விடுமுறை என்பதால், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியுள்ளது.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரெயில்கள் மற்றும் சென்னை புறநகர் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளது. ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால், ரெயில் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.  

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு