தமிழக செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகம் - புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை

வடமேற்கு வங்கக் கடலில் மேற்குவங்க மாநிலத்தின் டிக்ஹாவிற்கு 130 கி.மீ தொலைவிலும், ஒடிசா மாநிலம் பாலாசோருக்கு 160 கி.மீ தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.

இந்த புயல் சின்னம் அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து ஒடிசாவை ஓட்டியுள்ள பகுதியில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புயல் சின்னம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தைத் தொடர்ந்து, மீனவர்கள் வங்கக்கடலில் ஆழ்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பவும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை ஆய்வு மைய அதிகாரி விஜயன் கூறியதாவது

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில், கனமழை பெய்யும் என்றும், சென்னையை பெறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்