தமிழக செய்திகள்

வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுவையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுவையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

அக்னி நட்சத்திரம் விடை பெற்ற பின்னரும், சென்னையில் தொடர்ந்து வெயில் வறுத்தெடுத்து வருகிறது.

சுட்டெரிக்கும் சூரியனின் கதிர்வீச்சில் இருந்து தப்பிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் வியர்வை மழையில் நனைந்தவாறு சாலைகளில் ஆங்காங்கே மரத்தின் நிழலில் இளைப்பாறுவதற்காக தஞ்சம் அடைகின்றனர். வெயில் காரணமாக பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், மதிய நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்தநிலையில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி பள்ளிப்பட்டு, குழித்துறையில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை, திருத்தணி, தக்கலையில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆறுதல் செய்தியை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய கன மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து வீசும் அனல் காற்றே, சென்னையில் வெப்பம் அதிகரிப்பதற்கு காரணம்.

மழை பெய்தால் மட்டுமே வெப்பத்தின் தாக்கம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தமட்டில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி வெயில் பதிவாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்