தமிழக செய்திகள்

"சாயக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் சாய தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்படும்" - அமைச்சர் கே.சி.கருப்பணன்

சாயக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் சாய தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்படும் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

ஈரோடு,

ஈரோடு மாவட்டம், பவானி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள 17 கூட்டுறவு நெசவாளர் சங்க வங்கிகள் மூலம், 2 ஆயிரத்து 346 நெசவாளர்களுக்கு சுமார் 70 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போனஸ் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் கருப்பணன் நெசவாளர்களுக்கு போனஸ் தொகையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கருப்பணன், சாயக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் சாய தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்படும்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் கழிவுநீரை தடுப்பது தெடர்பாக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் கே.சி. கருப்பணன் தெரிவித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்