தமிழக செய்திகள்

வாக்காளர் பட்டியலில் இரட்டைப்பதிவுகளை நீக்க வேண்டும்; தமிழக தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்

வாக்காளர் பட்டியலில் இருந்து இரட்டைப்பதிவுகளை நீக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு காணொலி காட்சி வழியே மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் உரையாடினார். அவர் பேசும்பொழுது, தமிழக வாக்காளர் பட்டியலில் இரட்டைப்பதிவுகளை நீக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

எனினும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கெரேனா பாதிப்பு நெருக்கடியால் வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கெடுக்க முடியாத நிலையில், செயலி மூலம் கண்காணிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய அடிப்படையில் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை நடத்த தயார் நிலையில் இருக்கிறோம் என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார். வருகிற நவம்பர் 16ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்