சென்னை,
விண்ணப்பிக்க கடைசி நாளாக 10.6.2019 (நேற்று) என்று இந்த படிப்புகளுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுக்கு பிறகு விண்ணப்பங்கள் அதிகளவில் வருவதாலும், மாணவர்கள் நலன் கருதியும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி, வருகிற 17-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்தும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தும், தகுந்த சான்றிதழ் நகல்களுடன் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும்.
மேற்கண்ட தகவல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.