தமிழக செய்திகள்

'புராதன சின்னங்களை பாதுகாப்பது தொல்லியல் துறையின் கடமை' - ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

நாட்டில் உள்ள அனைத்து புராதன சின்னங்களையும் பாதுகாப்பது மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறைகளின் கடமை என ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

அரியலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோவிலில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த கட்டுமானப் பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனவும் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாட்டில் உள்ள அனைத்து புராதன சின்னங்களையும் பாதுகாப்பது மத்திய மற்றும் மாநில தெல்லியல் துறைகளின் கடமை என்று அறிவுறுத்தினர். மேலும் கங்கை கொண்ட சோழீஸ்வரர் கேவிலில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், அங்குள்ள புராதன சின்னங்களுக்கு அபாயகரமானது அல்ல என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மனுதாரரின் வாதத்தை பரிசீலித்து, மத்திய தெல்லியல் துறை 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்