தமிழக செய்திகள்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்

கல்லிடைக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடந்தது

தினத்தந்தி

கல்லிடைக்குறிச்சி:

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின்பொறியாளர் குருசாமி தலைமை தாங்கினார். அவர் முகாமில் கலந்து கொண்ட மின்நுகர்வோர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கல்லிடைக்குறிச்சி மின்வினியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு