கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின்பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு, மின்நுகர்வோர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கடையநல்லூர் செயற்பொறியாளர் பிரேமலதா மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு பின்னர் மின்வாரிய பணியாளர்களுக்கான பாதுகாப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் பலர் கலந்து கொண்டனர்.