தமிழக செய்திகள்

மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்:நெல்லிக்குப்பத்தில் இன்று நடக்கிறது

நெல்லிக்குப்பத்தில் இன்று மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.

நெல்லிக்குப்பம், 

நெல்லிக்குப்பம் மின்சாரத்துறை செயற்பொறியாளர் வள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லிக்குப்பத்தில் உள்ள கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் இன்று(செவ்வாய் கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. இதில் நெல்லிக்குப்பம் கோட்டத்திற்குட்பட்ட நெல்லிக்குப்பம், வாழப்பட்டு, திருக்கண்டேஸ்வரம், முள்ளிகிராம் பட்டு, வான்பாக்கம், நத்தப்பட்டு, வெள்ளப்பாக்கம், வரக்கால்பட்டு, பில்லாலி, காராமணிக்குப்பம், அழகிய நத்தம், பள்ளிப்பட்டு, குட்டியாங்குப்பம், தூக்கணாம்பாக்கம், அருங்குணம், திருமாணிக்குழி, நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், பத்திரக்கோட்டை, விலங்கல்பட்டு, பெத்தான்குப்பம், ஆராய்ச்சிகுப்பம், சாத்திப்பட்டு, கீழ்மாம்பட்டு, பாலூர், கிருஷ்ணாபுரம், சித்தரசூர், அகரம், சிலம்பிநாதன்பேட்டை, மேல் பட்டாம்பாக்கம், கவரப்பட்டு, கோழிப்பாக்கம், பகண்டை, அண்ணா கிராமம், மாளிகைமேடு, ஆண்டிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு மின்துறை சம்பந்தமான குறைகள் மற்றும் புகார்கள் குறித்து தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்