வள்ளியூர் (தெற்கு):
நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட வள்ளியூர் கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் (பொறுப்பு) வள்ளியூர் கோட்டம் ஆனந்தகுமார் மற்றும் உடன் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். இதில் வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்கள் கலந்து கொண்டனர். மின் நுகர்வோர்கள் மின் கட்டணத்தை இணைய வழி மூலமாக செலுத்தும் வசதி மற்றும் சேவைகள் குறித்து பொதுமக்களிடம் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டது. மேலும் மின் நுகர்வோர்கள் தங்களுக்கு மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் 94987 94987 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான மின்சாரம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.